துர்தரா யோகம்

ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிருந்து  12-ஆம் பாவத்திலும் 2-ஆம் பாவத்திலும் சுப கிரகங்கள் இருந்தால், துர்தரா யோகம் உண்டாகும்.  இதில் பிறப்பவர்கள் பணக்காரர் களாக இருப்பார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். பலரைக் காப்பாற்றுபவராக இருப்பார்கள்.

Advertisment

கேமேந்தும் யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து  2-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் எந்த கிரகங்களும் இல்லாமலிருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் நல்ல பணவசதியுடன் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Advertisment

வோஸி யோகம்

ஒரு ஜாதகத்தில் 12-ஆம் பாவத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர, வேறு எந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பண வசதியுடன் இருப்பார்கள். பணத்தைச் சேமிப்பார்கள். பெரிய மனிதர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும்.

வேஸி யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியனிலிருந்து 2-ஆம் பாவத்தில் சந்திரனைத் தவிர வேறு எந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் தைரியசாலியாக இருப்பார்கள். நேர்மை குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். அறிவாளியாக இருப்பார்கள். போரில் வீரனாக சண்டை போடுவார்கள்.

Advertisment

 உபயசாரி யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியனிலிருந்து 2-ஆம் பாவத்திலும், 12-ஆம் பாவத்திலும் சந்திரனைத் தவிர, வேறு எந்த சுபகிரகங்கள் இருந்தாலும், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பருமனாக இருப்பார்கள். அரசரைப்போல சந்தோஷமாக இருப்பார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

புத்ராஹீன் யோகம்

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்திற்கு அதிபதி, 6-ஆம் பாவத்தில், 8-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்குக் குழந்தை இருக்காது. பலருக்கு ஆண் குழந்தை இருக்காது. ஒருவேளை இருந்தால், வளர்ந்த பிறகு, அந்த வாரிசு பெற்றோருடன் இருக்காது.

செல்: 98401 11534